இலங்கையில் மேலும் 337 பேருக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய கொரோனாவின் மூன்றாவது அலை மூலம் இதுவரை 16 ஆயிரத்து 984 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.
இதையடுத்து மொத்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 508 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 5 ஆயிரத்து 921 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை 14 ஆயிரத்து 497 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அத்துடன் 90 பேர் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.