கிளிநொச்சி மாவட்டத்தின் சகல பாடசாலைகளும் இன்று முதல் மறு அறிவித்தல் வரை மூடல்

Report Print Rakesh in சமூகம்
480Shares

கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் அனைத்தும் இன்று தொடக்கம் மறு அறிவித்தல் வரை மூடப்படுகின்றதாக வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் அறிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் 72 வயதுடைய வயோதிபர் ஒருவருக்கு நேற்று கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து சுகாதாரத் துறையினர் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

வர்த்தகரான குறித்த வயோதிபருக்குக் கொரோனா எப்படி தொற்றியது என சுகாதாரத்துறையினரால் கண்டறியப்படாத நிலை காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் சமூகத் தொற்று ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதன் காரணமாகவே பாடசாலைகளைத் தற்காலிகமாக மூடும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் கூறியுள்ளார்.