இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்கள் தொடர்பில் வெளியான புதிய தகவல்

Report Print Vethu Vethu in சமூகம்
1245Shares

இலங்கையில் கொரோனா ரைவஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களில் நூற்றுக்கு 50 வீதமானோர் வீட்டிலேயே உயிரிழப்பதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் பிரதான வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

எனினும் அதற்கான உரிய காரணத்தை தன்னால் உறுதியாக கூற முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு வைரஸ் தொற்றுக்குள்ளாகி வீட்டிலேயே உயிரிழப்பவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளததாக அவர் கூறியுள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று வரை 92 ஆக அதிகரித்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் அதிகமானோர் வீட்டிலேயே உயிரிழந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


You May Like This Video...