கொரோனா தடுப்பூசி தொடர்பில் அரசியல்வாதிகளின் கருத்து! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை..

Report Print Ajith Ajith in சமூகம்
114Shares

கொரோனா தடுப்பூசி மற்றும் பரிசோதனைகள் தொடர்பாக அரசியல்வாதிகள் மற்றும் மதத்தலைவர்கள் கருத்துக்கூறுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அரசியல் நன்மைகளைப் பெற வேண்டாம் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் கோரியுள்ளது.

சம்ளேனத்தின் உதவி செயலாளர் வைத்திய கலாநிதி நவீன் டி சொய்சா இந்தக் கோரிக்கையை ஊடகவியலாளர் சந்திப்பின்போது விடுத்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி மற்றும் சோதனை முறைகள் குறித்து தாம் அறிந்தவற்றுக்கு அப்பால் கருத்துக்களை யாரும் வெளியிடக்கூடாது.

அரசியல்வாதிகள் மற்றும் மதத் தலைவர்களுக்கு மருத்துவத் துறை, மருத்துவம் மற்றும் மருத்துவ பரிசோதனைகள் பற்றி தெரிய வாய்ப்புக்கள் இல்லை.

எனவே இது தொடர்பாக தவறான தகவல்களைப் பரப்புவது மக்களை குழப்பமடையச் செய்யும், அத்துடன் மருத்துவத் துறையில் மக்களின் நம்பிக்கையும் சிதைந்துவிடும் என்று நவின் டி சொய்ஸா குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், இந்த வெள்ளிக்கிழமைக்குள் தமது சம்மேளனம் கொரோனா கண்காணிப்பு முறையை நாட்டுக்கு அறிமுகப்படுத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் மேல் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் இன்னும் கொரோனா நோயாளிகளின் நிலையான கண்காணிப்பு தரவுகளை தொற்றுநோயியல் துறைக்கு வழங்கவில்லை என்றும் நவின் டி சொய்ஸா குற்றம் சுமத்தினார்.

தமது புதிய முறையின் மூலம்இ நாட்டில் பரவுகின்ற கொரோனாவின் துல்லியமான வரைபடத்தை தம்மால் வழங்க முடியும், அத்துடன் அதிக ஆபத்துள்ள பகுதிகளை அடையாளம் காண்பது எளிதாக இருக்கும் என்றும் நவின் டி சொய்ஸா குறிப்பிட்டுள்ளார்.