கிளிநொச்சியில் நேற்றைய தினம் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து மாவட்டத்தின் பாதுகாப்பு தொடர்பில் ஆராயப்பட்ட பொது வெளி மாவட்டங்களிருந்து கிளிநொச்சி மாவட்டத்திற்கு வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் தமது பணிகளை தொடர முடியும் என மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்திலே அபிவிருத்தி பணிகளை செய்து வரும் ஒப்பந்த நிறுவனங்களுடனான கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் குறித்த ஒப்பந்த நிறுவனங்களுடனான கலந்துரையாடல் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.
மாவட்டத்தில் உள்ள அபிவிருத்திபணிகளை செய்து வரும் ஒப்பந்த நிறுவனங்களுடனான பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நேற்றைய தினம் கிளிநொச்சியில் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து தொற்றாளர் தொடர்பான அனைவரும் மீதான தொடர்புகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து கிளிநொச்சியில் அனைத்து பாடசாலைகளும் ஒரு வாரத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.