இலங்கைக்குள் கொவிட் தொற்றினால் மேலும் நான்கு மரணங்கள் பதிவாகியுள்ளன

Report Print Kamel Kamel in சமூகம்
191Shares

கொவிட் தொடர்பான மேலும் நான்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கையில் கொவிட் காரணாமக உயிரிழந்தோர் எண்ணிக்கை 94 ஆக உயர்வடைந்துள்ளது.

சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமைய இந்த ஊடக அறிக்கை வெளியிடப்படுவதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் கொவிட் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 20795 ஆக உயர்வடைந்துள்ளது.