பீ.சீ.ஆர் பரிசோதனை முடிவுகள் 24 மணித்தியாலங்களுக்குள் வழங்க வேண்டும்:நவீன் டிசொய்ஸா

Report Print Ajith Ajith in சமூகம்
36Shares

பீ.சி.ஆர் சோதனைகளின் முடிவுகள் 24 மணித்தியாலங்களுக்குள் வெளியிடப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளன உதவி செயலாளர் வைத்திய கலாநிதி நவீன் டிசொய்ஸா இந்தக் கோரிக்கை இன்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றின் போது விடுத்துள்ளார்.

தற்போது பெரும்பாலான பீ.சீ.ஆர் முடிவுகளை வெளியிட ஐந்து நாட்கள் செல்கின்றன.

ஐந்து நாட்களுக்குப் பின்னர் பீ.சீ.ஆர் முடிவுகளை பெறும் போது கொரோனா கட்டுப்பாடு தொடர்பில் எடுக்க வேண்டிய கூடுதல் நடவடிக்கைகளை அது தாமதப்படுத்தும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம் நாள் ஒன்றுக்குள் மேற்கொள்ளப்படும் பீ.சி.ஆர் சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய அவசியத்தையும் அவர் உணர்த்தியுள்ளார்.