கண்டி நகரில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் மூடப்படவுள்ளன என்று மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே அறிவித்துள்ளார்.
அதன்படி நாளை வியாழக்கிழமை தொடக்கம் டிசம்பர் 4ஆம் திகதி வரை கண்டி நகர பகுதியில் உள்ள 45 பாடசாலைகளை இவ்வாறு மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் அறிவித்துள்ளார்.
கண்டியில் கடந்த சில நாட்களாக சடுதியாக அதிகரிக்கும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையைக் கருத்தில்கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.