கிளிநொச்சியில் மேலும் 5 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!

Report Print Gokulan Gokulan in சமூகம்
314Shares

கிளிநொச்சியில் நேற்று முன்தினம் 72 வயதான முதியவர் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனையில் இன்று 5 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

72 வயது முதியவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டபோது, அவர் தொற்றிற்குள்ளான விதம் தொடர்பாகச் சந்தேகம் ஏற்பட்டிருந்தது.

அவர் பணியாற்றிய எரிபொருள் விற்பனை நிலையத்திற்கு அண்மையிலிருந்த தண்ணீர் போத்தல் விநியோக மையத்தின் மூலம், அல்லது மாகா நிறுவனத்தின் பணியாளர்கள் மூலம் தொற்று ஏற்பட்டிருக்கலாமென சந்தேகம் ஏற்பட்டது.

இன்றைய பி.சி.ஆர் முடிவுகளின் படி, முதியவர் பணியாற்றிய எரிபொருள் விற்பனை நிலையத்தின் அருகிலுள்ள தண்ணீர் விநியோக நிலையத்தில் உள்ள 3 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த மையத்தின் மூலமே முதியவர் தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை,தொற்றாளரின் மருமகனான எரிபொருள் விற்பனை நிலையத்தின் உரிமையாளர் மற்றும் பிறிதொருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, தண்ணீர் விற்பனை நிறுவனத்தின் மொத்த விற்பனையாளர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் தன்மை பற்றிய விபரத்தை வழங்கக் கோரப்பட்டுள்ளனர்.

தண்ணீர் போத்தல்களின் மொத்த விற்பனையாளர்களுடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்கள் அனைவரும் உடனடியாக சுகாதார வைத்திய அதிகாரியைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.