நாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு!

Report Print Murali Murali in சமூகம்
565Shares

நாட்டில் மேலும் சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, பண்டாரகம பொலிஸ் பிரிவின் கிழக்கு அடலுகம, எபிடமுல்ல மற்றும் கொலமெதிரிய ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கண்டி மாவட்டத்தின் அலவதுகொடை பிரிவின் ( அக்குரணை பிரதேச செயலக பிரிவு) புளுகஹாதென்ன மற்றும் தெலம்புகஹாவத்த ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசமான பண்டாரகம பொலிஸ் பிரிவின் கிரிமன்துடாவ கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்படுவதாக கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இதேவேளை, இலங்கைக்குள் இன்று மாத்திரம் 508 கொரோனா தொற்றாளிகள் கண்டறியப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே தொற்றாளிகளாக இருந்தவர்களின் நெருங்கியவர்களுடன் தொடர்பு கொண்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்

இதனையடுத்து இலங்கைக்கு கொரோனா தொற்றாளிகளின் மொத்த எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று இரவு வரை 21 ஆயிரத்து 469 பேர் தொற்றாளிகளாக கண்டறியப்பட்டனர்.

இவர்களிக் 5928 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுவரையில் 96 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.