இராஜேஸ்வரன் செந்தூரனின் 5 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு அனுஷ்டிப்பு!

Report Print Ajith Ajith in சமூகம்
338Shares

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தன்னுயிரை தியாகம் செய்த யாழ். கொக்குவில் இந்து கல்லூரியின் உயர்தர மாணவன் இராஜேஸ்வரன் செந்தூரனின் 5 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி உதயநகரில் உள்ள ஈரோஸ் ஜனநாயக முற்போக்கு கூட்டமைப்பின் கிளிநொச்சி அலுவலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

2015 ஆம் ஆண்டு வெலிக்கடைச் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உணவுத்தவிர்ப்பை மேற்கொண்டிருந்தனர்.

இந்த போராடத்துக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் 2015 ஆண்டு நவம்பர் 25ஆம் யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரியின் உயர்தர மாணவன் இராஜேஸ்வரன் செந்தூரன் தன்னுயிரைப் போக்கிக்கொண்டார்.

இந்த நிலையில் ஈரோஸ் ஜனநாயக முற்போக்கு கூட்டமைப்பின் அரசியல் பொறுப்பாளரும், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினருமாகிய ஆறுமுகம் ஜோன்சன் தலைமையில் கிளிநொச்சி அலுவலகத்தில் அகவணக்கம் செலுத்தப்பட்டது.