வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேலெழுந்தவாரியாக இன்று 152 நபர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் ஓட்டமாவடி பொதுச் சந்தை என்பவற்றில் மேலெழுந்தவாரியாக 93 நபர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
அத்தோடு கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் வைத்திய அதிகாரி எஸ்.ரீ.நஜீப்கான் தலைமையில் மேலெழுந்தவாரியாக 59 நபர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் இடம்பெற்றிருந்தன.
இதன்போது மீன் வியாபாரிகள், மரக்கறி வியாபாரிகள், பழங்கள் வியாபாரிகள், இறைச்சி வியாபாரிகள், சில்லறைக்கடை வியாபாரிகள், பொருட்கள் கொள்வனவு செய்த மக்கள், சமூகமட்ட தலைவர்கள் ஆகியோருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த பரிசோதனை நடவடிக்கைகளில் பொதுச் சுகாதார மேற்பார்வை பரிசோதகர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் எனப் பலர் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
