கண்டி தேசிய வைத்தியசாலையின் இரு பணியாளர்களுக்கு கொரோனா தொற்று

Report Print Kamel Kamel in சமூகம்
66Shares

கண்டி தேசிய வைத்தியசாலையின் இரண்டு பணியாளர்களுக்கு கொவிட் - 19 நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.

இந்த விடயத்தை கண்டி தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் இரேசா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பணியாளர்கள் இருவர் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்ட போது அவர்களிடம் பீ.சீ.ஆர் பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில், அதன் மூலம் அவர்களுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

தொண்டை மற்றும் காது தொடர்பான நோய் சிகிச்சைப் பிரிவில் பணியாற்றிய இரண்டு பேருக்கே இவ்வாறு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்த சிகிச்சைப் பிரிவில் பணியாற்றிய ஏனைய உத்தியோகத்தர்களுக்கு தற்பொழுது பீ.சீ.ஆர் பரிசோதனை நடாத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொண்டை மற்றும் காது சிகிச்சைப் பிரிவு இன்றைய தினம் மூடப்பட்டிருப்பதாகவும் வைத்தியர் இரேசா தெரிவித்துள்ளார்.

இந்த நோய்த் தொற்றாளர்களுடன் தொடர்பு பேணியவர்கள் பற்றிய விபரங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.