யாழ்.விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு சென்ற பேருந்து விபத்து தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள முக்கிய பணிப்புரை

Report Print Yathu in சமூகம்
88Shares

யாழ்.விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு ஓமான் நாட்டிலிருந்து வந்தவர்களை ஏற்றிவந்த பேருந்து இன்று விபத்துக்குள்ளான போது அங்கிருந்த கிளிநொச்சி பிராந்திய சுகாதார பணிப்பாளர் உள்ளிட்டவா்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது.

ஓமான் நாட்டிலிருந்து வந்த 25 பயணிகளுடன் யாழ்.விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு வந்த பேருந்தின் சாரதி துாங்கிய நிலையில் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து வீதியை விட்டு விலகி நீர் விநியோக குழாய் மீது மோதி விபத்துக்குள்ளாகியிருந்தது.

சம்பவத்தில் 17 பேர் காயமடைந்த நிலையில், அங்கு காயமடைந்தவர்களை காப்பாற்ற சென்ற படையினர், மற்றும் பளை வைத்தியசாலையில் அவர்களை பார்வையிட்ட கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் மருத்துவர், தாதியர்கள்,சிற்றுாழியர்கள்,காவலர், பொது சுகாதார பரிசோதகர், ஊடகவியலாளர் ஆகியோரை இவ்வாறு தனிமைப்படுத்தலில் இருக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது.

முன்னர் மருத்துவரொருவர், தாதியொருவர், காவலாளியொருவர், சிற்றுாழியர்கள் 4 பேர், ஊடகவியலாளரொருவா் என 8 பேரை தனிமைப்படுத்தலில் இருக்குமாறு பணிக்கப்பட்டிருந்த நிலையில், சம்பவ இடத்தில் பலர் இருந்தமை வெளிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து சுகாதார பிாிவு இந்நடவடிக்கையினை எடுத்திருப்பதாக மாவட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.