குற்றப்புலனாய்வுத்துறையின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர தொற்று நோயியல் மருத்துவமனைக்கு மாற்றம்

Report Print Ajith Ajith in சமூகம்
82Shares

குற்றப்புலனாய்வுத்துறையின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர தொற்று நோயியல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மஹர சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளான பின்னர் கல்லெல்ல இராணுவ முகாம் சிகிச்சை நிலையத்துக்கு மாற்றப்பட்டதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்திருந்தது.

அவரை தொற்று நோயியல் மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என்று ஆணைக்குழு கோரியிருந்தது.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் இன்று இதற்கான கோரிக்கையை முன்வைத்திருந்தார்.

அவரின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக அவர் அச்சம் வெளியிட்டார்.முன்னதாக கொலை செய்யப்பட்ட சண்டே லீடர் செய்தித்தாளின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்ஷா உட்பட காணாமல்போனோரின் உறவுகளின் குழுவும் ஷானி அபேசேகரவை தொற்று நோயியல் மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என்று கோரியிருந்தது.

இந்தநிலையில் அவர் அங்கொடையில் உள்ள தொற்று நோயியல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த அரசாங்க காலத்தின் போது தற்போதைய அரசாங்கத்தின் சார்பாளர்களுக்கு எதிரான ஆயுத வழக்கு ஒன்றில் பொய்யான சாட்சியங்களை உருவாக்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஷானி அபேசேகர, கைது செய்யப்பட்டு மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த 25ஆம் திகதியன்று உறுதிச்செய்யப்பட்டது.