காரைநகர் பிரதேச செயலக பிரிவை தனிமைப்படுத்தும் தீர்மானம் இன்று காலை வரை எடுக்கப்படவில்லை என யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கொரோனா தொற்று உள்ளவருடன் தொடர்புடையவர்களை சுகாதாரத் துறையினர் தேடி வருகின்றனர்.
இன்று மாலை அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
காரைநகரில் இன்று காலை 8 மணிவரை 36 குடும்பங்கள் வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சில வர்த்தக நிலையங்களை மறு அறிவித்தல் வரைமூடுவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து காரைநகருக்கு திரும்பிய ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் சென்று வந்த இடங்களுடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.
இந்த நிலையில் சுகாதாரத் துறையினரின் கள நிலமைகளை ஆராய்ந்து இன்று மாலை அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.