மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த முற்பட்ட அருட்தந்தை பாஸ்கரன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம், நீதவான் நீதிமன்றினால் குறித்த பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற தடை உத்தரவை மீறி நினைவேந்தலை நடத்த முயன்றமை உள்ளிட்ட 3 குற்றச்சாட்டுகளை முன்வைத்து இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் அவர் முற்படுத்தப்பட்டார்.
அருட்தந்தை சார்பில் சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் முன்னிலையாகினார். சந்தேக நபர் சார்பில் பிணை விண்ணப்பத்தை முன்வைத்து அவர் சமர்ப்பணம் செய்தார். பிணைக்கு கடும் ஆட்சேபனை தெரிவித்த பொலிஸார், சந்தேக நபருக்கு வெளிநாடுகளிலிருந்து நிதிப் பங்களிப்பு கிடைப்பது தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் மன்றுரைத்தனர்.
விசாரணைகளின் பின்னர் அருட்தந்தையை ஒரு லட்சம் ரூபாய் ஆள் பிணையில் விடுவிக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் வழக்கு விசாரணை வரும் மார்ச் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

You May Like This Video...