கண்டியில் மருத்துவருக்கும் 7 தாதியருக்கும் கொரோனா

Report Print Rakesh in சமூகம்

கண்டி தேசிய மருத்துவமனையில் மேலும் 8 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

தொண்டை, காது மற்றும் மூக்கு சிகிச்சைப் பிரிவின் மருத்துவர் ஒருவரும், ஏழுதாதியர்களும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் எனக் கண்டி மருத்துவமனை பதில் பணிப்பாளர் மருத்துவர் ஈரேஷா பெர்னாண்டோ தெரிவித்தார்.

அதன்படி, கண்டி தேசிய மருத்துவமனையில் 18 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். இந்த மாதம் 26 ஆம் திகதி கண்டி மருத்துவமனையின் ஊழியர்களுக்கு நடத்திய பி.சி.ஆர். பரிசோதனையின்போது தொண்டை, காது மற்றும் மூக்கு சிகிச்சை பிரிவின் இரண்டு தாதியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.

அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் அந்தப் பிரிவில் பணியாற்றியவர்கள் அனைவரும் இன்று பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதையடுத்து, கண்டி தேசிய மருத்துவமனையின் தொண்டை, காது மற்றும் மூக்கு சிகிச்சைப் பிரிவு மூடப்பட்டுள்ளது.