மருத்துவ தம்பதியினருக்கு கொவிட் தொற்று உறுதி

Report Print Kamel Kamel in சமூகம்
650Shares

கேகாலை மாவட்டம் ருவான்வெல்ல பகுதியில் மருத்துவ தம்பதியினருக்கு கொவிட்-19 நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது.

பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் மூலம் இந்த இருவருக்கும் கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்த மருத்துவரிடம் நாள் ஒன்றுக்கு சுமார் 100 முதல் 150 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மருத்துவரின் சிகிச்சை நிலையத்தில் கொவிட் பாதுகாப்பு வழிமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை எனவும் ,நோயாளிகள் தொற்று நீக்கப்பட்டு சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொட்டியாகும்புர, புலத்கொஹ_பிட்டிய, ருவன்வெல்ல, கலபிடமட உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இந்த மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுக்கொண்டுள்ளனர்.

இவ்வாறு குறித்த மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுக்கொண்டவர்கள் பொதுச்சுகாதார பரிசோதகரை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.