இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு!!

Report Print Murali Murali in சமூகம்
178Shares

இலங்கையில் மேலும் 213 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இறுதியாக கிடைத்த பி.சி.ஆர் முடிவுகளின் படி இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

குறித்த அனைவரும் நோயாளர்கள் உடன் நெருங்கிப் பழகியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் இன்றைய தினம் இதுவரையில் 487 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய மினுவங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 19,450 ஆக அதிகரித்துள்ளது.