இலங்கையில் கொவிட் தொடர்பில் மேலும் இரண்டு மரணங்கள் பதிவு!

Report Print Kamel Kamel in சமூகம்
290Shares

கொவிட்-19 நோய்த் தொற்று தொடர்பில் மேலும் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளன.

அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையில் கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 109 ஆக உயர்வடைந்துள்ளது.

கெழும்பு 2 பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயதான ஆண் ஒருவர், கடந்த 26ம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார். சிறுநீரக நோய், இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு, கொவிட் காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு 8 பிரதேசத்தைச் சேர்ந்த 96 வயதான பெண் ஒருவர், 27ம் திகதி உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா மற்றும் சுவாசப்பிரச்சினைகள் காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.