கொரோனாவால் கொழும்பில் 81 பேர் உயிரிழப்பு!

Report Print Rakesh in சமூகம்
223Shares

கொரோனா வைரஸ் தாக்கத்தின் மூன்றாவது அலையால் இலங்கையில் இன்று வரை 109 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களில் 81 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் கடந்த மார்ச் மாதம் முதல் ஒக்டோபர் 22 வரையான சுமார் 8 மாத காலப்பகுதியில் கொரோனாவால் 13 பேரே உயிரிழந்திருந்தனர். ஒக்டோபர் 31ஆம் திகதியாகும்போது மரண எண்ணிக்கை 20 ஆக அதிகரித்தது.

எனினும், கடந்துள்ள 29 நாட்களில் மாத்திரம் 89 பேர் உயிரிழந்துள்ளனர். நாளாந்தம் கொரோனா மரணங்கள் நிகழ்ந்த வண்ணமுள்ளன. கொழும்பு மாவட்டத்திலேயே அதிக மரணங்கள் பதிவாகியுள்ளன.

கொரோனாவால் கடந்த மார்ச் முதல் இன்று வரை 109 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 81 பேர் கொழும்பு மாவட்டத்தையும், 13 பேர் கம்பஹா மாவட்டத்தையும், 06 பேர் களுத்துறை மாவட்டத்தையும், 04 பேர் குருநாகல் மாவட்டத்தையும், 03 பேர் புத்தளம் மாவட்டத்தையும், ஒருவர் நுவரெலியா மாவட்டத்தையும் சேர்ந்தவர்களாவர்.

இனந்தெரியாத ஒருவரும் உயிரிழந்துள்ளார். அதனால் அவர் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவரவில்லை.