தனிமைப்படுத்தலின் போது அதிகாரிகளின் அலட்சியம்! குழந்தையை பறிகொடுத்த பெண்

Report Print Murali Murali in சமூகம்
919Shares

தனிமைப்படுத்தலின் போது அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக கர்ப்பத்தில் இருந்த குழந்தையை இழக்க நேரிட்டதாக கொழும்பு - களனி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

முன்பள்ளி ஆசிரியையான 21 வயதான கவிஷா மதுஷானி இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

எனது கணவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், தனிமைப்படுத்தல் முகாமுக்கு அழைத்து சென்றபோது அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக தான் குழந்தையை இழந்ததாக கூறியுள்ளார்.

குறித்த பெண்ணின் கணவர் பேலியகொட மீன் சந்தையில் பணிப்புரிந்த நிலையில், கடந்த மாதம் 24 ஆம் திகதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து, அதிகாரிகள் அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் களனி பகுதியில் இருந்து தனிமைப்படுத்தலுக்காக தியதலாவ தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு அழைத்துச் சென்றிருந்தனர்.

கவிஷா மதுஷானி உள்ளிட்ட அவரது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டனர், இதன் போது அவர்களுக்கு கொரோனா தொற்றில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, குறித்த குடும்பத்தை மீண்டும் களனி பகுதியிலுள்ள அவர்களது வீட்டிற்கு அதிகாரிகள் அழைத்து வந்துள்ளனர்.

தனிமைப்படுத்தல் நிறைவு பெற்றதன் பின்னர், குறித்த யுவதிக்கு இரத்த கசிவு ஏற்பட்டதை அடுத்து, அவர் கொழும்பு காசல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பரிசோதனைகளில், குறித்த யுவதியின் கர்ப்பம் கலைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.