நாட்டின் பல பகுதிகளில் கொரோனா பரவல்கள் உருவாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தொற்றாளர்கள் குறைவாக உள்ள சில பிரதேசங்களில் இதுவரையில் புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட ஆரம்பித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன தெரிவித்துள்ளார்.
விசேடமாக கொழும்பு மாநகர சபை எல்லையில் தொற்றாளர்கள் அதிகமாக அடையாளம் காணப்படுவதன் காரணமாக, வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த பொது சுகாதார ஆய்வாளர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் பிரதேசங்களில் பயண கட்டுப்பாடுகளை தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.