திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் மோட்டார்சைக்கிளொன்று விபத்துக்குள்ளானதில் அதனை ஓட்டிச் சென்ற இளைஞர் பலத்த காயங்களுக்கு இலக்காகியுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது தலையில் பலத்த காயங்களுடன் குறித்த இளைஞர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்துச் சம்பவத்தில் திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரே காயமடைந்துள்ளார்.
விபத்துக்குள்ளான மோட்டார்சைக்கிளுக்கு இலக்கத்தகடுகள் மற்றும் அனுமதிப்பத்திரம் இல்லையெனவும், ஒரு வழிப்பாதையில் தவறான பக்கத்தில் வேகமாக சென்று வேகத்தை கட்டுப்படுத்த முடியாது காணுக்குள் விழுந்து விபத்திற்கு இலக்காகியுள்ளதாகவும் தெரியவருகிறது.
குறித்த விபத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.