திருகோணமலை விளக்கமறியல் சிறைச்சாலையிலிருந்து ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 13 கைதிகள் நேற்றைய தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் சில கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையிலேயே திருகோணமலை விளக்கமறியல் சிறைச்சாலையிலிருந்து சிறுகுற்றங்கள் புரிந்த பதின்மூன்று கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இவ்வாறு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் நீண்ட நாட்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளையும் விடுவிக்குமாறு சிலர் கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.