காரைநகர் இந்துக்கல்லூரி 3 நாட்கள் மூடப்படுவதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு

Report Print Gokulan Gokulan in சமூகம்
121Shares

காரைநகர் இந்துக் கல்லூரி 3 நாட்கள் மூடப்படுவதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல். இளங்கோவன் அறிவித்துள்ளார்.

வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் ஆலோசனைக்கு அமைய நாளை திங்கட்கிழமை தொடக்கம் வரும் புதன்கிழமை வரை 3 நாட்களுக்கு காரைநகர் இந்துக்கல்லூரி மூடப்படுகின்றது.

காரைநகரில் கொரோனா தொற்று உள்ள ஒருவர் கண்டறியப்பட்ட நிலையில், அவருடன் நெருக்கமாகப் பழகிய ஆசிரியரொருவர், காரைநகர் இந்துக் கல்லூரியில் கற்பிக்கின்ற நிலையில்,அவர் கடந்த வாரம் பாடசாலைக்குச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் அவரது பீ.சி.ஆர் பரிசோதனை வரும் புதன்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளதுடன்,கொரோனா தொற்று இல்லை என்று அறிக்கை கிடைத்தால் மறுநாள் வியாழக்கிழமை பாடசாலை ஆரம்பிக்கப்படும் என்றும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.