கொழும்பின் நிலைமை அபாயகரமானது – அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்

Report Print Kamel Kamel in சமூகம்
381Shares

கொழும்பின் நிலைமை அபாயகரமானது என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் இதுவரையில் பதிவான கொவிட் மரணங்களில் 91 வீதமான மரணங்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளது என தெரிவித்துள்ளது.

அராசங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் சிரேஸ்ட பிரதிநிதி ஹரித அலுத்கே ஊடகங்களுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் எந்த பகுதியில் ஆபத்து மையமாகியுள்ளது என்பதனை நாம் புதிதாக சொல்லத்தேவையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏனைய மாவட்டங்களில் 9 வீதமான கொவிட் மரணங்களே பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எனவே மேல் மாகாணத்தில் விசேடமான தீர்மானங்களை எடுப்பதற்கு நாம் தயங்கக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்திலும் கொழும்பு மாவட்டத்திலேயே கூடுதலான ஆபத்து நிலைமை காணப்படுகின்றது என டொக்டர் ஹரித அலுத்கே சுட்டிக்காட்டியுள்ளார்.