முல்லேரியா தொற்று நோயியல் மருத்துவமனையில் பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதன் காரணமாக நாள் ஒன்றில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் எண்ணிக்கை 2 ஆயிரத்தினால் உயர்ந்துள்ளது.
இதனையடுத்து நாள் ஒன்றுக்கு மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனைகளின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரமாக உயர்ந்துள்ளது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேலகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் தொற்றுக்கு உள்ளானவர்களின் சோதனை முடிவுகள் 24 மணிநேரத்திலும் தொற்றுக்கு உள்ளாகாதோரின் சோதனை முடிவுகள் 48 மணித்தியாலங்களிலும் வெளியிடப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே முல்லேரியாவில் உள்ள பீ.சீ.ஆர் இயந்திரம் பழுதடைந்ததன் காரணமாகவே பரிசோதனைகளின் முடிவுகள் தாமதமாகின என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.