சில வைத்தியசாலைகளுக்கு முன்னால் ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ள அகில இலங்கை சுகாதார சங்க சம்மேளனம்

Report Print Ajith Ajith in சமூகம்
102Shares

அகில இலங்கை சுகாதார சங்க சம்மேளனம் அடுத்து வரும் மூன்று நாட்களில் குறித்த சில வைத்தியசாலைகளுக்கு முன்னால் ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளதாக தெரியவருகிறது.

கொரோனா தடுப்பு விடயத்தில் விஞ்ஞான முறையிலான பொறிமுறை செயற்படுத்தப்பட வேண்டும்.

பாதீட்டில் சுகாதாரத்துறைக்கு அதிக நிதியொதுக்கம் மற்றும் கொரோனா தடுப்பில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தே ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நாளை டிசம்பர் முதலாம் திகதியன்று குருநாகல் போதனா வைத்தியசாலையின் முன்பாகவும், டிசம்பர் 2ஆம் திகதியன்று காலி, மாத்தறை, மாத்தளை மற்றும் சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலைக்கு வைத்தியசாலைக்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.

டிசம்பர் 3ஆம் திகதியன்று கொழும்பு தெற்கு போதான வைத்தியசாலை, பதுளை, அம்பாறை, தங்காலை மற்றும் ஹொரனை ஆகிய வைத்தியசாலைகளுக்கு முன்பாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.