மஹர சிறைச்சாலைக்குள் நடந்த பயங்கரம்- 6 சடலங்கள் மீட்பு - 43 பேர் படுகாயம்

Report Print Vethu Vethu in சமூகம்
1848Shares

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக உயிரிழந்த 6 பேரின் சடலங்கள் இதுவரையில் ராகம வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

சம்பவத்தில் காயமடைந்த 43 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ராகம வைத்தியசாலையின் இயக்குனர் வைத்தியர் ஜெல்டன் பெரேரா தெரிவித்துள்ளார்.

மஹர சிறைச்சாலையில் கைதிகள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதனை தொடர்ந்து சில கைதிகள் சிறைச்சாலைகளை விட்டு தப்பி செல்ல முயற்சித்துள்ளனர்.

இதனை அடிப்படையாக வைத்து நேற்று பிற்பகல் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

அதற்கமைய இந்த நிலைமை மாலை வரையில் மோதலாக மாறியுள்ளது. தற்போது சிறைச்சாலையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளுக்கு விளக்கமறியலில் உள்ள கைதிகள் தாக்குதல் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக சிறைச்சாலை அதிகாரிகள் குறைந்த பட்ச அதிகாரத்தை பயன்படுத்தியுள்ள நிலையில் அங்கு துப்பாக்கி பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எப்படியிருப்பினும் ஏற்பட்ட பதற்ற நிலைமையை கட்டுப்படுத்ததுவதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அழைக்கப்பட்டனர்.

சிறைச்சாலைக்கு வெளியே பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனினும் இரவு வரையில் கைதிகளின் சிறைச்சாலைக்கும், சுகாதார அலுவலகத்திற்கும் தீ வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இன்று அதிகாலை 3 மணி வரையில் தீ விபத்து பாரிய அளவில் பரவ ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


You May Like This Video...