நாடு முழுவதும் வழமைக்குத் திரும்பும் பேருந்து சேவைகள்

Report Print Manju in சமூகம்
98Shares

நாடு முழுவதும் இன்று முதல் பேருந்து சேவைகள் வழமை போன்று இடம்பெறும் என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸிலி ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டதை தொடர்ந்து போதியளவு பேருந்துகள் சேவையில் ஈடுபடவில்லை என்ற விடயத்தை கவனத்திற் கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

கடந்த காலங்களில் பாரிய அளவில் குறைக்கப்பட்டிருந்த தூரப்பிரதேசங்களுக்கான பேருந்து சேவை வழமைக்கு கொண்டுவரப்படவுள்ளன.

மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் பேருந்து சேவைகளை உரிய வகையில் நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மேல் மாகாணத்தை தவிர, ஏனைய பகுதிகளில் தனியார் பேருந்து சேவைகளை உரிய வகையில் நடத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும், தனிமைப்படுத்தல் நிலைமையில் இருந்து விடுவிக்கப்பட்ட இடங்களில் உள்ள புகையிரத நிலையங்களிலும் இன்று முதல் புகையிரதங்கள் நிறுத்தப்படும் என்றும் புகையிரதத் திணைக்களம் அறிவித்துள்ளது.