சிறுவன் துடிதுடித்து மரணம்! கிண்ணியா வைத்தியசாலையில் பதற்றம்..

Report Print Abdulsalam Yaseem in சமூகம்
2873Shares

திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குட்டியாகுளம் பகுதியில் 13 வயது சிறுவன் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த சிறுவன் கிண்ணியா - நடுவூற்று கிராம உத்தியோகத்தர் பிரிவு குட்டியாகுளம் பகுதியைச் சேர்ந்த அஜீஸ் அஜ்மி என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சிறுவனுக்கு உடம்பில் வலி ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலைக்கு சென்றதாகவும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இருந்தபோதிலும் வைத்தியசாலைக்கு கொண்டு வரும்போது உயிரிழந்த நிலையில் இருந்ததாகவும் வைத்தியசாலை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

ஆனாலும் மரணத்திற்கான காரணம் எதுவும் தெரியாதமையினால் குறித்த சிறுவனின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், சிறுவனின் மரணம் தொடர்பில் வைத்தியசாலையில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது..