வவுனியா சிதம்பரபுரம் நாகராசா வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற ஐயம் உருவாகியுள்ளது.
இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
சிதம்பரபுரம் நாகராசா வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் காரைநகரில் இடம்பெற்ற அந்தியெட்டி நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்தார்.
குறித்த நிகழ்விற்குக் கொழும்பில் தொற்றுக்குள்ளான நபர் ஒருவரும் கலந்து கொண்டிருந்தார்.
சிதம்பரபுரம் நாகராசா வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியரும் அந்நிகழ்வுக்கு சென்று வந்துள்ளார்.
ஆகவே இவ் ஆசிரியருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உருவாகியுள்ளது.
எனவே குறித்த பாடசாலை மூடப்படுமா? இவ்விடயம் தொடர்பாகச் சுகாதார திணைக்களத்தினர் மற்றும் கல்வித் திணைக்களத்தினர் அவசர கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்கள்.
இவ்விடயம் தொடர்பாகக் கல்வி பணிப்பாளரிடம் தொடர்புகொண்டு வினவியபோது குறித்த ஆசிரியர் அந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்ததாகவும், குறித்த அந்தியெட்டிநிகழ்வுக்கு தொற்றுக்குள்ளான நபர் கலந்துகொள்ள முன்னர் தான் அவ்விடத்திலிருந்து வீடு திரும்பியுள்ளதாகவும் ஆசிரியர் கூறியுள்ளார்.
இருப்பினும் குறித்த ஆசிரியருக்கான பி. சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் தாம் பாடசாலை மூடுவதா? இல்லையா? என்பது தொடர்பாக பொதுச்சுகாதார பரிசோதகர்களிடம் கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளதாகவும் குறித்த பாடசாலையில் இன்று நூறு மாணவர்களின் வரவு இருந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.