கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் இயங்கும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து அதிகரித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை இலங்கை பொது சுகாதார பரிசோதர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக கொழும்பு மாநகரசபையின் சில பிரதேசங்களில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த முடியாமல் இருப்பதாகவும் அந்த சங்கத்தினர் கூறியுள்ளனர்.
பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் கொழும்பு நகர எல்லைக்குள் வைரஸ் பரவல் மற்றும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் பொது சுகாதார பரிசோதர்களின் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நூறினைக் கடந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.