மஹர சிறைச்சாலை சம்பவம் குறித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் - எதிர்க்கட்சி தலைவர்

Report Print Steephen Steephen in சமூகம்
38Shares

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட நிலைமை சம்பந்தமாகச் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் தலைமையில் விசாரணைகள் நடத்தப்படுவதாகச் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

எனினும் இவ்வாறான விசாரணைகளில் உண்மைகளைக் கண்டறிய முடியாது என்பதால், சுயாதீன குழுவை நியமித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவல் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தச் சுயாதீன குழு அத்தியாவசியம் எனவும் அவர் கூறியுள்ளார்.

சிறைச்சாலைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் இருப்பதாகவும் மஹர சிறையில் மாத்திரம் 189 கொரோனா தொற்றாளர்கள் இருப்பதாகவும் இந்த கொத்தணி ஏற்பட்ட விதம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு, எதிர்காலத்தில் இப்படியான நிலைமை ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

நாட்டில் ஏனைய பிரதேசங்களைப் போல் சிறையில் இருக்கும் மக்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.