கொழும்பில் கொரோனா நிலைமை தீவிரம்! முதல்வர் ரோஸி விடுத்துள்ள வேண்டுகோள்

Report Print Ajith Ajith in சமூகம்
325Shares

கொழும்பில் கொரோனா இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிகமான மக்கள் தொற்றுநோயுடன் நாள் தோறும் கண்டுபிடிக்கப்படும் நிலையில் கொழும்பின் நிலைமை தீவிரமானது என்று கொழும்பு மாநகர முதல்வர் ரோஸி சேனநாயக்க எச்சரித்துள்ளார்.

சமீபத்திய கொரோனா வைரஸ் இறப்புகள் மற்றும் நோய்த்தொற்றுகள் பெரும்பாலும் கொழும்பு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டவை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் ஓய்வுபெற்ற முன்னாள் பொதுச் சுகாதார ஆய்வாளர்கள் மீண்டும் சேவைக்கு வரவேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன் தாம், கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்திடமும் கொழும்பு மாநகரசபைக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் ரோஸி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாள் ஒன்றுக்கு 991 பி.சி.ஆர் சோதனைகளை நடத்தியபோது 249 கொரோனா தொற்றுக்கள் கண்டறியப்பட்டன. இதனைப் பார்க்கும்போது இது ஒரு தீவிரமான பிரச்சனையாகும்.

ஒரு நகரத்தில் ஐந்து கொரோனா தொற்றாளி கண்டறியப்பட்டாலும் அதை ஒரு தீவிரமான பிரச்சனையாகவே பார்க்க வேண்டும். எனினும் பொதுமக்கள் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று ரோஸி சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.