அமெரிக்க தடுப்பூசி ஒன்றின் இலங்கை விலை 22 ஆயிரம் ரூபாய்

Report Print Vethu Vethu in சமூகம்
164Shares

அமெரிக்காவில் தயாரிக்கப்படும் கொரோனா எதிர்ப்பு தடுப்பூசி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தடுப்பூசியை இலங்கைக்கு பெற்றுக் கொள்வதற்கு 1000 கோடி ரூபாய் பணம் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைக்கு அமைய குறித்த தடுப்பூசி சந்தைக்கு விடப்பட்டால், 11 ஆயிரம் ரூபாயில் அறிமுகப்படுத்தி வைக்கப்படும் என அரச பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும் அது வெற்றி அடையும் பட்சத்தில் அதன் விலையை இரட்டிப்பாக்குவதற்கு எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி ஒரு தடுப்பூசியின் விலை 22 ஆயிரம் ரூபாவாகும்.

தற்போது இதற்கு ஒரு போட்டி நிலை ஏற்பட்டுள்ளதுடன், குறைந்த விலையில் தடுப்பூசி விற்பனை செய்வதற்கு ரஷ்ய நாடு முன்வந்துள்ளது.

எனினும் அதனை விடவும் வெற்றியளித்துள்ளதாக கூறப்படும் மேற்கத்திய தடுப்பூசியை இலங்கைக்கு கொள்வனவு செய்வதற்கு 1000 கோடி ரூபாய் பணம் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.