வவுனியாவில் மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! ஒருவர் காயம்

Report Print Theesan in சமூகம்
166Shares

வவுனியா தொடருந்து நிலைய வீதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடருந்து நிலைய வீதியிலிருந்து குருமன்காடு நோக்கிப் பயணித்த மோட்டார்சைக்கிளுடன், எதிர்த்திசையில் பயணித்த மற்றுமொரு மோட்டார்சைக்கிள் நேருக்குநேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றிருந்தது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்குச் சென்ற வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.