மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கோரவெளி காட்டுப் பகுதியில் நேற்று ஒரு தொகை துப்பாக்கி ரவைகள் மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தேசிய புலனாய்வு பிரிவுக்குக் கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் கோரவெளி காட்டுப்பகுதியில் நேற்று தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போதே குறித்த பகுதியிலுள்ள நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.