கொரோனா அச்சம் காரணமாக கடந்த வியாழக்கிழமை மூடப்பட்ட பாடசாலை மீள திறப்பு

Report Print Rusath in சமூகம்
109Shares

கொரோனா அச்சம் காரணமாக கடந்த வியாழக்கிழமை மூடப்பட்ட காத்தான்குடி பதுறியா வித்தியாலயம் இன்று மீளத் திறக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.எம்.கலாவுதீன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்ள காத்தான்குடி பதுறியா வித்தியாலயம் கடந்த வியாழக்கிழமை (26.11.2020) அன்று கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்டது.

கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பெண்ணொருவரின் உறவுமுறையான மாணவியொருவர் பாடசாலைக்கு அன்றைய தினம் சமூகமளித்ததால் அச்சம் காரணமாக பாடசாலை மூடப்பட்டது.

பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை குறித்த மாணவிக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட போது கொவிட் தொற்று இல்லையென தெரிவிக்கப்பட்டதையடுத்து பாடசாலையில் தொற்று நீக்கம் செய்ததன் பின்னர் இன்று மீண்டும் பாடசாலை திறக்கப்பட்டதாக காத்தான்குடி கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.எம்.கலாவுதீன் தெரிவித்துள்ளார்.