விசமிகளால் சேதமாக்கப்பட்டது கண்டலடி மாவீரர் துயிலும் இல்லம்! இரா.சாணக்கியன் கண்டனம்

Report Print Kumar in சமூகம்
176Shares

கண்டலடி மாவீரர் துயிலும் இல்லம் சேதமாக்கப்பட்டுள்ளமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

கார்த்திகை தீபத்திருநாளான நேற்றைய தினம் இனம் தெரியாத விசமிகளினால் வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லம் சேதமாக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் குறித்த இடத்திற்கு இன்றைய தினம் சென்ற இரா.சாணக்கியன், விசமிகளினால் சேதமாக்கப்பட்டிருந்த கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தினை பார்வையிட்டிருந்தார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், இவ்வாறான செயற்பாடுகள் எம் உரிமை மற்றும் உணர்வுகளை ஒடுக்குவதாக அமையாது, மேலும் தூண்டுவதாக அமைகின்றது எனக் குறிப்பிட்டிருந்தார்.