நீர்கொழும்பு சிறைக் கூரை மீதேறி நான்கு பெண் கைதிகள் போராட்டம்! தரையில் இருந்தவாறும் சிலர் ஆர்ப்பாட்டம்

Report Print Rakesh in சமூகம்
162Shares

நீர்கொழும்பு சிறைச்சாலையின் கூரை மீது ஏறி நான்கு பெண் கைதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன், சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேலும் சில பெண் கைதிகள், தரையில் இருந்தவாறு இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு வழங்கி வருகின்றனர்.

வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்துமாறு கோரிக்கை விடுத்து, குறித்த பெண் கைதிகள் இன்று மாலை முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஹெரோயின் விற்பனை தொடர்பான குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குறித்த நான்கு பெண் கைதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உதவி செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்குப் பொலிஸ் அதிகாரிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்று நீர்கொழும்பு பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.