மஹர சிறை கலவரத்தில் காயமடைந்த கைதிகளில் 26 பேருக்குக் கொரோனா!

Report Print Rakesh in சமூகம்
71Shares

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையில் காயமடைந்த கைதிகளில் 26 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கலவரத்தில் காயமடைந்த கைதிகள் ராகம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின்போதே குறித்த 26 கைதிகளுக்கும் கொரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என ராகம வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

மஹர சிறைச்சாலையில் உள்ள கைதிகளில் 183 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து சிறைச்சாலையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தமக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளுமாறு கைதிகள் கோரிய நிலையிலேயே அங்கு அமைதியின்மை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.