நாட்டில் புதிய துணை கொரோனா தொடர்ச்சிகள் உருவாவதைக் கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகள் முயற்சி

Report Print Ajith Ajith in சமூகம்
64Shares

நாட்டில் புதிய துணை கொரோனா தொடர்ச்சிகள் உருவாவதைக் கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகள் மற்றும் தொற்றுநோயியல் பிரிவு என்பன அதிகபட்ச முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஊடகங்கள் மத்தியில் இன்று உரையாற்றிய அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனத்தின் செயலாளர் வைத்திய கலாநிதி ஹரித்த அலுத்கே இந்த கோரிக்கைளை விடுத்துள்ளார்.

சிறைச்சாலைகள், அரச மற்றும் தனியார் மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், சுதந்திர வர்த்தக வலயங்கள், காவல்துறை மற்றும் பல்வேறு நிறுவனங்கள் போன்ற பல்வேறு இடங்களில் தொடர்ச்சியான தொற்றுக்கள் தோன்றுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

இதனைக் கட்டுப்படுத்துவதற்கு கண்காணிப்பு செயல்முறை அவசியமானது அதற்காக,சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் முழு சுகாதாரத் துறையினருக்கு உரிய அத்தியாவசிய வசதிகள் மற்றும் சேவைகள் வழங்கப்பட வேண்டும்.

பொது சுகாதார அமைப்பை வலுப்படுத்தாமல் கண்காணிப்பு செயல்முறை தொடர முடியாது.எனவே இதற்கான முக்கிய பொறுப்பை தொற்றுநோயியல் பிரிவு எடுக்க வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட நாடு கொரோனாவின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த முடிந்தால், அந்த நாடு கொரோனா வைரஸிலிருந்து விடுபட முடியும். இல்லையென்றால் நிலைமை மோசமடைகிறது என்றும் ஹரித்த அலுத்கே குறிப்பிட்டுள்ளார்.