விடுதலைப் புலிகளின் தலைவரின் பிறந்த தினத்தை கொண்டாடியவர்களுக்கு விளக்கமறியல்

Report Print Kumar in சமூகம்
62Shares

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாளைக் கொண்டாடுதல், மாவீரர் தினத்தை அனுஷ்டித்தல் தொடர்பான தகவல்களை பேஸ்புக்கில் வெளியிட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 4 இளைஞர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் பொலிஸாரால் கடந்த 26ஆம் திகதி மாலை கைது செய்யப்படட சந்தேக நபர்கள், நீதிமன்ற அனுமதியின் கீழ், ஏறாவூர்ப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வந்த நிலையில், நீதிவான் நீதிமன்ற பதில் நீதவான் வினோபா இந்திரன் முன்னிலையில் நேற்று (29) ஆஜர் செய்யப்பட்டனர்.

இவ்வேளையிலேயே, சந்தேகநபர்களை டிசெம்பர் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதவான் உத்தரவிட்டார்.

விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்கள் நான்கு பேரும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தீவிரவாதத்தைத் தூண்டும் வகையில் செயற்பட்ட குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மேற்படி சந்தேகநபர்கள், சித்தாண்டி, வந்தாறுமூலை, கொம்மாதுறை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.