தமக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலை பிரதமரின் இளைய மகன் மறுப்பு

Report Print Ajith Ajith in சமூகம்
269Shares

தமக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலை பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷ மறுத்துள்ளார்.

ஊடகம் ஒன்றிடம் அவர் இந்த மறுப்பை அவர் வெளியிட்டுள்ளார்.தாம் கண்டியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியான போதும் அதில் உண்மையில்லை.

தாம் கொழும்பிலேயே தற்போது இருப்பதாக ரோஹித்த குறிப்பிட்டுள்ளார்.அவரது குடும்பம் தனிமையில் வைக்கப்பட்டுள்ளது என்ற ஊகத்தையும் ரோஹித்த மறுத்துள்ளார்.

பிரதம மந்திரி அலுவலகத்தில் இணைக்கப்பட்ட சில ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கையாக இந்த மாத தொடக்கத்தில் தாமும் தமது குடும்பத்தினரும் சுயமாக தனிமைப்படுத்திக்கொண்டதாக அவர் கூறினார்.

இதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் சோதனையில் தமக்கும், மனைவிக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்ததாக ரோஹித்த குறிப்பிட்டுள்ளார்.