காங்கேசன்துறைக் கடலில் அலையில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டாம் நபரின் சடலமும் மீட்பு

Report Print Rakesh in சமூகம்
375Shares

காங்கேசன்துறைக் கடலில் குளிக்கச்சென்ற இருவர் நேற்று அலையில் அடித்துச் சென்ற நிலையில் இரண்டாவது நபரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

காங்கேசன்துறை தல்செவன இராணுவ நட்சத்திர விடுதிக்கு அருகாமையில் நேற்றுப்பிற்பகல் ஒரு மணியளவில் கடலில் குளித்துக் கொண்டிருந்த இரண்டு பேர் அலையில் அடித்துச் செல்லப்பட்டனர்.

தையிட்டியைச் சேர்ந்த சிவச்சந்திரன் நிரோஜன் (வயது - 19), மாசிலாமணிதவச்செல்வம் (வயது - 19) ஆகிய இருவருமே கடல் அலையில் அடித்துச்செல்லப்பட்டனர்.

அவர்களில் சிவச்சந்திரன் நிரோஜன் என்பவரது சடலம் நேற்று மாலை 5 மணியளவில் கடற்படையின் உதவியுடன் மீட்கப்பட்டது.

இந்த நிலையில் மற்றையவரான மாசிலாமணி தவச்செல்வத்தின் சடலமும் இன்று மீட்கப்பட்டுள்ளது.

இரு சடலங்களும் தெல்லிப்பழை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன.