காணாமல் ஆக்கப்பட்டவரின் தாயின் அவல நிலை!ஆதரவற்று தவிக்கும் குடும்பம்

Report Print Kanmani in சமூகம்
64Shares

பத்து வருட காலமாகியும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் இதுவரை காலமும் எதுவித பதிலும் வழங்காத நிலையில் சர்வதேசமாவது நியாயமான பதிலை கூற வேண்டும் எனக் கோரி உறவுகள் எண்ணவோ இன்றும் போராடிக்கொண்டு தான் இருக்கின்றார்கள்.

அந்த வகையில்,புதுக்குடியிருப்பு,கைவேலி பகுதியைச் சேர்ந்த இராசலிங்கம் நாகரத்தினம் (மனைவி) பரிமளாதேவி தம்பதியினர் மூத்த மகனை தொலைத்து விட்டு நான்கு பெண் பிள்ளைகளுடன் தாம் அனுபவிக்கும் துன்பங்களை கண்ணீரோடு பகிர்ந்துக்கொண்டுள்ளனர்.

இப்படி வறுமையில் வாழும் இவர்களின் துன்பங்களும், துயரங்களும் குறித்து இன்னும் சொல்லப்படாதவை ஏராளம். ஆனால், அவை இன்னமும் திரைக்குப் பின்னால் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.

இவர்கள் தனது வாழ்வில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஐ.பி.சி தமிழின் 'என் இனமே என் சனமே' என்ற காணொளி ஊடாக இவ்வாறு பகிர்ந்துக் கொண்டுள்ளனர்.

இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் Whatsapp /Viber +94767776363/+94212030600