இலங்கையில் கொரோனா அச்சுறுத்தல் மிக்க பிரதேசங்கள்! சுகாதார அமைச்சு வெளியிட்ட வரைபடம்

Report Print Murali Murali in சமூகம்
296Shares

சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு இலங்கையில் அதிக ஆபத்துள்ள கொரோனா வைரஸ் பகுதிகள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது.

சுகாதாரப் பகுதிகளின் மருத்துவ அதிகாரிகளின் வகைப்படுத்தல், பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களின் விநியோகம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு வரைபடத்தை வெளியிட்டது.

நவம்பர் 25 ஆம் திகதியுடன் முடிவடைந்த இறுதி 14 நாட்களுக்குள் பதிவாகியுள்ள தொற்றாளர்கள் குறித்த தகவல்களின் அடிப்படையில் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,448 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 496 பேர் நோய் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

இதுவரையில் 17,560 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 6,304 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 118 பேர் இலங்கையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.